செல்லக்குழந்தை
தொலைதூரத்திலும் கேட்கிறது ................. விடைபெற்று வந்தபோது வீட்டுக்கதவோரம் நின்று விம்மி அழுத -என் செல்லக்குழந்தையின் குரல் ..........!
தொலைபேசி
அன்பானவனே ....! நீ அறிவாயா ....? உன் கரங்களால் எடுக்கும் வரை கதறும் உன் தொலைபேசி ஒலியைப்போல....................... என் இதயமும் இங்கே கதறுவதை .........!
எச்சரிக்கை
என் காதல் தேவதையே ..... உன் இமைகளை சிறிதுநேரம் மூடிக்கொள் தொடர்ந்து உன் விழிகளை நோக்கும் சக்தி என்னிடம் இல்லை................!